அந்த கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க சொன்ன சிவாஜி….. ஷாக்கான கமல்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய கமலஹாசன், எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. என்னுடைய மணிரத்தினம் கதை பற்றி சொல்ல நிறைய உள்ளது.

இதை எம்ஜிஆர் வாங்கி வைத்திருந்தார். அவர் சீக்கிரம் எடுத்துவிடு என்று சொன்னார்,அப்போது புரியவில்லை. ஆனால் அந்த எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டது. நான் முயற்சி செய்தேன். ஆனால் என்னால் எடுக்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. மணிரத்தினம் வெற்றி பட்டியலில் முக்கிய படமாக இது இருக்கும். இது ஒரு சிறிய குடும்பம் இதில் பொறாமைப்பட நேரம் இல்லை. அதை இளம் வயதில் புரிந்து கொண்டவர் நானும் ரஜினியும். வந்திய தேவன் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்க வைக்க வேண்டும் என்று சிவாஜி சொன்னாரா. அதை கேட்ட எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன்னா, அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்று என்னை சரி சிவாஜி சாரே ரஜினி சொல்லிட்டாரேன்னு அதை விட்டுவிட்டு. அப்ப எனக்கு என்ன கேரக்டர் என்று கேட்டேன்? நீ அருண்மொழிவர்மன் கேரக்டர் செய் என்றார். அது அன்று நடக்காமல் போனது. இன்று ரஜினி செய்ய நினைத்த கேரக்டர் கார்த்தியும், எனக்கான கேரக்டர் ஜெயம் ரவி நடிக்க கிடைத்துள்ளது. வெற்றி வரும் தோல்வி வரும். ஆனால் அதனை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஏ.ஆர்.ரகுமானின் ஒவ்வொரு பாட்டும் என்னுடைய இதயத்துடிப்பு அதிகரித்தது. நீங்கள் எனக்காக போட்ட பாடலை நான் திரும்பத் திரும்ப கேட்டு வந்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.