“அந்த கதாபாத்திரத்தில் தனுஷுக்கு பதிலாக நான்தான் நடித்தேன்” உண்மையை போட்டுடைத்த நடிகர் பார்த்திபன்….!!!!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பொன்னியன் செல்வன். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நடிகர் பார்த்திபன் தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று அதிகாலை ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார்.

அப்போது தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று வழிபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பது இயக்குனர் செல்வராகவன் கூறியது. அந்த படத்தின் முதல் பாகத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால் தனுசிற்கு பதிலாக நான் நடித்தேன். இப்பொழுது என் கதாபாத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். அவர் நடித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.