அந்த உளவாளி யார்….? உடனடியாக கண்டறிய வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!!!!!

முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை தினந்தோறும் விமர்சனம் செய்து வருகிறார். திமுக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகின்றார். மேலும் இதற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதற்கிடையே தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலைக்கு முன்கூட்டியே தெரிந்து விடுகிறது என கூறப்படுகின்றது.

அதாவது மகாபலிபுரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் விவகாரம், மின்சார கொள்முதல், கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து மாவு கொள்முதல் போன்ற விவகாரங்கள் அண்ணாமலைக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அரசின் கொள்கை முடிவுகள் எப்படி வெளியே தெரிகிறது  என முதல்வர் ஸ்டாலின் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம். இதனால் அரசு உயர் அதிகாரிகள் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறுகின்றது கோட்டை வட்டாரம்.

இதனையடுத்து தலைமைச் செயலகத்திலிருந்து யார் மூலமாக தகவல்கள் வெளியாகிறது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். எதிர்க்கட்சியினருக்கு குறிப்பாக அண்ணாமலைக்கு தகவல் தரும் அந்த உளவாளி  யார் என்பதை உடனடியாக கண்டறிய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக உத்தரவிட்டு இருக்கிறாராம். இதையடுத்து மாநில தலைவர் அண்ணாமலை உடன் தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் யார் யார் என்று ரகசிய விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலைக்கு தகவல் தந்த நபர் கடும் அச்சத்தில் உலா வருவதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *