அத்துமீறி நுழைந்த கிராம நிர்வாக அலுவலர்….. தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள சிவாயம் வடக்கு பகுதி கிராம நிர்வாக அலுவலராக அன்பராஜ்(36) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, 2 வயதுடைய மகள் இருக்கிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஒரு பெண்ணின் பின்புற வாசல் வழியாக அன்புராஜ் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். பின்னர் தூங்கி கொண்டிருந்த பெண்ணை அன்புராஜ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது திடுக்கிட்டு எழுந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். இதனால் அன்புராஜ் எங்கிருந்து சென்று விட்டார்.

இதனை அடுத்து மறுநாள் அந்த பெண் கடைக்கு சென்றபோது, அன்புராஜ் அவரை வழிமறித்து என் மீது புகார் அளித்தால் உன்னையும், உனது கணவரையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அன்புராஜை கைது செய்து குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.