அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றம்…. முதல்வர் நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணமாக இருப்பவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து விலை ஏற்றத்திற்கு காரணமாக இருப்பவரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று முதல்வரிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,தமிழகத்தில் சில நாட்களாக பழங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. பெங்களூரு தக்காளி ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிலோ 55 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதைப்போன்று நாட்டுத் தக்காளி வெங்காயம் பீன்ஸ், கேரட் ஆகிய காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

பண்டிகை நாட்கள், திருமண நாட்கள் முன்னிட்டு காய்கறிகளின் தேவை அதிகரிக்கும் என்பதால் அவற்றை கிடங்குகளில் பதுக்குவதாகவும் இவற்றின் மூலமாக ஏற்பட்ட செயற்கை தட்டுப்பாடுகள்தான் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. உளுந்தம் பருப்பு விலை கிலோ 22 ரூபாய் அதிகரித்துள்ளதாகவும், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றின் விலையும் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் அதிகரித்துள்ளதாகவும், இதர மளிகை பொருட்கள் பூண்டு, புளி, கடுகு போன்றவற்றின் விளையும் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது.

எனவே இவற்றிற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவை மாநில அரசின் கடமை ஆகும். அதனால் முதல்வர் முக. ஸ்டாலின் அவற்றிற்கு தனி கவனம் செலுத்தி விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *