உலக அளவில் WWE நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதேபோன்று ஸ்டார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த இரு நிகழ்ச்சிகளும் எதார்த்தமாக நடைபெறுகிறதா அல்லது ஸ்கிரிப்ட் படி முன்னதாகவே திட்டமிட்டு நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். இந்நிலையில் இது தொடர்பான ஒரு கேள்விக்கு தற்போது WWE வீரர் கிரேட் காளி ஒரு நிகழ்ச்சியில் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சி முழுமையாக ஸ்கிரிப்ட் படி தயார் செய்யப்பட்டு நடத்தப்படுகிறது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் என்ன பேச வேண்டும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து முன்னதாகவே தெரிவிக்கிறார்கள். அதன்படி தான் அனைவரும் நடந்து கொள்கிறார்கள். இதேபோன்றுதான் WWE போட்டிகள் கூட ஸ்கிரிப்ட் செய்யப்படுகிறது. தற்போது திருமணங்கள் கூட ஸ்கிரிப்ட் படி தான் நடைபெறுகிறது. ஏன் ஒட்டுமொத்த உலகமும் ஸ்கிரிப்ட் படி தான் செயல்படுகிறது என்று கூறினார்‌. மேலும் கிரேட் காளி ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 4-ல் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.