“அதெல்லாம் இல்லாமலே பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் மோதுவதா…?” கவலையில் தனுஷ் ரசிகாஸ்….!!!!!

தனுஷின் நானே வருவேன் திரைப்படமும் பொன்னியின் செல்வன் திரைப்படமும் மோதுவதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் தனுஷ். இத்திரைப்படமானது வருகின்ற 29ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. மேலும் இத்திரைப்படம் வெளியாகிய அடுத்த நாளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பாடல்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இத்திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஆனால் நானே வருவேன் படக்குழு படத்திற்காக எந்தவித பிரமோஷன் பணிகளையும் செய்யவில்லை. மேலும் ட்ரைலர் இல்லாமலே படம் வெளியாக உள்ளதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். படத்திற்கான ப்ரோமோஷன் எதுவும் இல்லாமல் பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் மோதுவதா என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.