விழுப்புரம் மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு உதயநிதி ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தொடங்க வைத்தார். இந்த நிலையில் அரசின் நலத்திட்டங்கள் பற்றி மக்களிடம் விரிவாக பேசினார். அப்போது பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர கொண்டுவரப்பட்ட திட்டம் என பேச ஆரம்பித்தார்.

திடீரென அந்தத் திட்டத்தின் பெயரை மறந்து ஒரு கணம் யோசித்தார். இதனையடுத்து அருகில் இருந்த நிர்வாகியிடம் திட்டம் பற்றி கேட்டார். அவர் புதுமைப்பெண் திட்டம் என கூறினார். பின்னர் சமாளித்து உதயநிதி தன் பேச்சை தொடர்ந்தார்.