அது நம்ம தம்பி தான்….! கேஜிஎப் ராக்கி பாய் மாதிரி சொல்லுங்க… உதாரணம் காட்டிய சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கேஜிஎப் நடிச்ச யாஷ் என்ற நடிகர் சொல்றாரு…. நான் கன்னடம் என்பதில் பெருமை என்கிறாரே. பெருமைக்குரிய கன்னடன்  என்று தானே சொல்கிறார்கள். அது மாதிரி நான் தமிழன் என்பதை பெருமை என்று சொல்ல வேண்டியதுதானே.  அது ஒரு சின்ன புள்ள நம்ம  தம்பி,  அவருக்கு தெரியல. அதனால அதை விட்டுடனும்.

எல்லாத்தையுமே விமர்சிக்கனும் என்கிற நோக்கத்திலேயே இருந்தீங்கன்னா அதுவே ஒரு நோயாகி விடும். தொடர்ச்சியாக எதையாவது சொல்லிக்கிட்டே இருக்கணும் இருந்தா சரியா இருக்காது. அது அவருடைய கருத்து, அவரு சொல்றாரு. நான் கருப்பா இருப்பதால் திராவிடன் என சொல்கின்றார்.

கருப்பா இருந்தா…. தென்னாபிரிக்காவில் எல்லாரும் கருப்பா தான் இருக்கான். அப்போ அவனெல்லாம் திராவிடனா ? எருமமாடு எல்லாம் கருப்பா தான் இருக்கு. அது திராவிடறா ? எதையாவது சொல்லி கிட்டு இருக்குறது.

எங்க இனத்தின் நிறம் கருப்பு. நாங்க கருப்பர்கள் தான். உழைக்கும் மக்களின் தோல் கருப்பாக தான் இருக்கும். உட்கார்ந்து தின்பவன்  தோல் தான் வெள்ளையாக மினுமினுப்பாக இருக்கும். நாங்க காட்டுல… மேட்டுல…. பனியில்….  வெயிலில்…. மழையில்….நனைச்சு  வேலை செய்பவர்கள் உடம்பு  அப்படித்தான் இருக்கும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *