கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தாந்தோணி மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன்(30) என்பதும், அவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததும் உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மகேந்திரனை கைது செய்து அவரிடமிருந்த 64 கிராம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.