அது உங்களுடைய பணமா…? தொழிலாளியிடம் 1 1/4 லட்சம் அபேஸ்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

நிலக்கோட்டை அருகே உள்ள கரியம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர்  வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான   இவர் தனது மகனின் திருமண செலவிற்காக நகைகளை அடகு வைக்க நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வண்டி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அதன்பின் வங்கியில் நகைகளை அடகு வைத்து 1,30,000 பெற்றதாக கூறப்படுகின்றது.

அந்த பணத்தை பாண்டி ஒரு பையில் வைத்து மோட்டார் சைக்கிள்  நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு  இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அதன் பின் அவர்கள் பாண்டியிடம் கீழே 500 ரூபாய் நோட்டுகள் விழுந்து கிடப்பதாகவும் அது உங்களுடைய தானா என கேட்டுள்ளனர். இதனை அடுத்து அவர் தன் கையில் வைத்திருந்த பணப்பையை மோட்டார் சைக்கிளில்  வைத்து விட்டு கீழே கிடந்த நோட்டுகளை எடுக்க முயற்சி செய்தார். அந்த சமயத்தில் பாண்டியிடம் இருந்த பணப்பையை கொள்ளையடித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதற்கிடையே கீழே கிடந்த மூவாயிரத்தை எடுத்து பார்த்தபோது தன்னுடைய பணப்பையை காணாமல் போனதை அறிந்த பாண்டி அதிர்ச்சடைந்துள்ளார். பணத்தை சிதறவிட்டு பாண்டியன் கவனத்தில் திசை திருப்பும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இது பற்றி நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பாண்டி புகார் அளித்துள்ளார் அதன் பெயரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *