அதிவேகமாக வந்த வாகனம்…. துடிதுடித்து இறந்த முதியவர்…. கோர விபத்து….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வன்னிவேடு பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது இந்த கோவிலுக்கு எதிரே உள்ள பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையை 50 வயது மதிக்கத்தக்க முதியவர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் படுகாயம்டைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *