அதிவேகமாக வந்த லாரி…. துடிதுடித்து இறந்த சமையல்காரர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற சமையல்காரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையம் கரட்டாங்காடு பகுதியில் சமையல்காரரா ன செல்வம்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வம் ஆயாகாட்டூர் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி செல்வத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று செல்வத்தின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *