அதிவேகமாக வந்து மோதிய கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. மதுரையில் கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் பொதுமக்கள் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ராஜக்காபட்டியைச் சேர்ந்த மலைச்சாமி, பெருமாள்பட்டியை சேர்ந்த கல்பனா, கள்ளப்பட்டியை சேர்ந்த சுப்புலட்சுமி, ஒத்தபாறைபட்டியை சேர்ந்த சுந்தரம், உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த முத்துலட்சுமி ஆகிய 5 பேரும் காயமடைந்தனர்.

இதில் சுப்புலட்சுமி கர்ப்பமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து காயமடைந்த 5 பேரையும் அருகிலுள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுநரான தென்னரசு என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *