உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் 12 வயது சிறுமிக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று சிறுமி வயலுக்கு சென்றுள்ளார் அப்போது, ராஜு கான் என்பவர் அந்த சிறுமியிடம் சென்று நைசாக பேச்சி கொடுத்துள்ளார், தனது முதலாளி மொய்ன் கான் வேலைக்கு ஆள் தேடிக்கொண்டிருப்பதாக கூறிய அந்த சிறுமியை நம்பவைத்து, பின்னர் மொய்ன் கானுக்கு சொந்தமான பேக்கரிக்கு அழைத்துச் சென்று மொய்ன் கான் மற்றும் ராஜு கான் இருவரும் பலாத்காரம் செய்ததுடன், மேலும் அந்தச் செயலை வீடியோவாக மொபைல் போனில் பதிவு செய்துள்ளார்கள்.
இந்த விஷயத்தை யாரிடமும் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்றும், வீடியோவை வெளியிட்டுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளார்கள். அத்துடன் அந்த சிறுயை சுமார் 2 மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளார்.
தனது வீடியோ வெளியீட்டு விடுவார்கள் என்று பயந்துபோன சிறுமி நீண்ட நாட்களாக மவுனம் காத்து வந்த நிலையில், சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதை அறிந்த சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். சிறுமியிடம் கேட்டதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஜூலை 29-ஆம் தேதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மொய்ன் கான் மற்றும் அவரது வேலைக்காரன் ராஜு கான் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மொய்ன் கானின் சட்டவிரோத கட்டுமானங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்தார். அத்துடன் குற்றவாளிகள் சும்மா விடமாட்டேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்த சம்பவம் அயோத்தியின் புராகலந்தர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மொய்ன் கானின் பேக்கரியில் நடந்துள்ளது. மொய்ன் கான், சமாஜ்வாடி கட்சியின் ஃபைசாபாத் எம்பி அவதேஷ் பிரசாத்தின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக புராகலந்தர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரத்தன் சர்மா மற்றும் பதார்சா outpost இன்ஸ்பெக்டர் அகிலேஷ் குப்தா இருவரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் , வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.