இடையடுக்கை பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் – ஹவ்வம்மா தம்பதியரின் மகள், 17 வயதான இஷானா யூடியூபில் பிரபலமானவர். இந்த நிலையில் இஷானா துணி காய போடா சென்றுள்ளார். அப்போது ஈரமான துணி மின் கம்பி மீது பட்டதாக தெரிகிறது. இதனால் இஷானா மீது மின்சாரம் பாய்ந்தது.
தனது மகளின் உயிருக்கு போராடுவதை தன் கண்களால் கண்ட ஹவ்வம்மா, அவளை காப்பாற்ற முனைந்தபோது அவரும் மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்தார். உடனடியாக செங்கலத்தில் உள்ள ஈ.கே.நாயனார் கூட்டுறவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இஷானா தனது 11ம் வகுப்பை பாதியில் விட்டுவிட்டு யூடியூப்பில் குறும்படங்கள் வெளியிடுவதில் ஈடுபட்டார், அவரது பதிவுகள் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தன.