பிரபலமான இத்தாலிய நடிகை கினா லோலோபிரிகிடா (95). இவர் வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவின் காரணமாக தற்போது காலமானார். கடந்த 1950 மற்றும் 60’களில் ஐரோப்பிய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்தார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் ஆன நிலையில் ரசிகர்கள் பலரும் நடிகை கினைவை உலகின் அழகான பெண் என்றே அன்போடு அழைத்தனர்.
இந்நிலையில் நடிகை கினா காலமானதாக உறவினர்கள் தகவல் வெளியிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகையின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.