சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் மகளிர் இலவச பேருந்து இயக்கப்பட்டது. அந்த பேருந்தில் பயணித்த பெண்கள் இலவச பேருந்தில் கட்டணம் வசூலித்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் நத்தம், சமுத்திராப்பட்டி, கொட்டாம்பட்டி பகுதியில் ஏறிய பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஆனால் பாண்டாங்குடியில் ஏறிய பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.