அதிரடி வாகன சோதனை… தப்பியோடிய லாரி டிரைவர்… 10டன் அரிசி பறிமுதல்…!!

காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த 10டன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி உத்தமபாளையம் கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி ஸ்ரேயா குப்தா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள புறவழி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து அப்பகுதி வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது லாரியில் 10 டன் எடையுள்ள 200 மூட்டை ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போது லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அதனை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீதும், தப்பி ஓடிய லாரி டிரைவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *