அதிரடியான ஆட்டம்…. தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய சுனில் கவாஸ்கர்….!!!

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு (36)வாய்ப்பு அளிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் தினேஷ் கார்த்திக் தனது அதிரடியான பேட்டிங் மூலமாக ஆட்டத்தின் போக்கை மாற்றுகின்றார். அவரது வயதை பார்க்காமல் என்ன மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பதை பாருங்கள். அவருடைய ஆட்டம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. ஆறாவது,ஏழாவது வரிசையில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை தற்போது செய்து வருகிறார். எனவே அவருக்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் வாய்ப்பளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.