இன்று ஏப்ரல் 1 ஆம் தேதி என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் 19 கிலோ கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.76 குறைந்துள்ளது. மார்ச் மாதம் ரூ.2,268ஆக இருந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ஏப்ரலில் ரூ.2,192ஆக குறைந்துள்ளது. அதேசமயம், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் 1118.50-க்கு விற்பனையாகிறது.