நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு வழங்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 1,000 விருப்ப மனுக்கள் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்.21ம் தேதி முதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது. பொதுத் தொகுதியில் போட்டியிட ரூ.20,000, தனித் தொகுதியில் போட்டியிட ரூ.15,000 செலுத்தி கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பெறலாம்.