அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை?…. இன்று அவசர விசாரணை….!!!!

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி  நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ்  சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, மனுதாக்கல் நடைப்பெற்று வருகிறது.
எனவே இந்த பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படவுள்ளது. நீதிபதி கே.குமரேஷ்பாபு இன்று காலை 10 மணிக்கு இந்த வழக்கை விசாரிக்கின்றார்.

Leave a Reply