அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை… பெரும் பதற்றம்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நாகராஜ் கிளாய் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பின் பின்புறம் நேற்று இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்து கொண்டிருந்தார். அப்போது மது தீர்ந்து விட்டதால் விஜயகாந்த், கண்ணன் ஆகிய இரண்டு பேரையும் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

அவர்கள் மது வாங்கிவிட்டு திரும்பி வருவதற்குள் நாகராஜ் கழுத்து, முகம், வயிறு போன்ற பகுதிகளில் பலத்த வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாகராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.