“அதிமுக சட்டவிதிப்படி….. தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர்”…. ஓபிஎஸ் பேட்டி….!!!

அதிமுக சட்ட விதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்க கோரி வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் இன்று தமிழகம் வந்த திரௌபதி கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்தார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி இடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் இருவரும் தனித்தனியாக ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதன் பிறகு செய்தி அவர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் ‘அதிமுக சட்ட விதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர்’ என்று கூறினார். கடந்த 23ஆம் தேதி அதிமுக பொது குழுவில் 23 தீர்மானங்களும் நிறைகரிக்கப்பட்டதால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாகிவிட்டதாகவும் தற்போது ஓ பன்னீர்செல்வம் பொருளாளர் மட்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறிவரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.