மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இன்றோடு தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைகிறது. இந்நிலையில் அதிமுக – தேமுதிக கூட்டணியால் மக்களுக்கு டீ கூட வாங்கித் தர முடியாதென விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் விமர்சித்துள்ளார். திருமங்கலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், அதிமுக கூட்டணியால் குரல் மட்டுமே கொடுக்க முடியும்.

அவர்களின் பிரதமர் யாரென்று சொல்ல முடியுமா? என வினவிய ராதிகா, நாங்கள் குரல் கொடுக்க வரவில்லை. மக்களின் வளர்ச்சிக்காக செய்வோமென்று கூறுவதாக உறுதிப்பட தெரிவித்தார்.