
அதிமுக கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன். இவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதால் திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகிறார்கள்.
அவருக்கு என்ன பிரச்சனை என்பது தெரிவிக்கப்படாத நிலையில் அவருடைய முன்னாள் எம்பி குமார் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படம் வெளியாகி அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.