“அதிமுக இணைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம்”…. ஓபிஎஸ் ப்ளீச்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட இருக்கிறார். அதன் பிறகு அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்க இருப்பதாக கூறியுள்ளதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு ஓபிஎஸ் பாஜக போட்டியிட்டால் தங்களுடைய முழு ஆதரவும் பாஜகவுக்கு இருக்கும் என்றும் இல்லையெனில் அதிமுக சார்பில் வேட்பாளரை தாங்கள் நியமிப்போம் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகத்தை சந்தித்து இடைத்தேர்தல் குறித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு கொடுப்போம் என்ற நிலைப்பாட்டோடு பேசி சண்முகத்தை சந்தித்து பேசி உள்ளோம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அதிமுகவை வலுவான இயக்கமாக உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். எங்களை சந்திக்கும் போதெல்லாம் பிரதமர் மோடி அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறுவார். ஆனால் எடப்பாடி தரப்பு அதிமுகவை இக்கட்டான சூழ்நிலையில் தள்ளி விட்டார்கள். மேலும் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனால் அதற்கு ஓ. பன்னீர்செல்வம் காரணமாக இருக்க மாட்டார் என்று கூறினார்.

Leave a Reply