அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கையொப்பமிட்டு கொடுத்த கடிதத்தை ஆளுநர் ரவியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வழங்கினர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக எம்பி என் ஆர் இளங்கோ, டான்சி வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றம் தண்டனை விதித்த பின்னரும் 2001 ஆம் ஆண்டில் முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார். உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் ராஜினாமா செய்து பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்கினார். இதுதான் அதிமுகவின் வரலாறு என்று விமர்சித்தார்.