அதிமுகவை இனி தேர்தலுக்காக…. பாஜக பயன்படுத்த முடியாது – ஸ்டாலின் விமர்சனம்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “போகின்ற போக்கைப் பார்த்தால் அதிமுகவை இனி தேர்தலுக்காக கூட பாஜக பயன்படுத்திய பயன்படுத்த முடியாது போல் தெரிகிறது. தேர்தலில் அதிமுக ஜீரோவாகும் என்பதால் அவர்களை பாஜக பயன்படுத்த முடியாது” என்று விமர்சித்துப் பேசியுள்ளார்.