அதிமுகவும் எங்களுக்கே…! இரட்டை இலையும் எங்களுக்கே…. டிடிவி பரபரப்பு பேட்டி …!!

அஇஅதிமுக, இரட்டை இலையை கைப்பற்றும் பணி தொடரும் எனஅம்மா மக்கள்முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழக எல்லைக்குள் நுழைந்தார். சென்னையை நோக்கி அவர் கார் வந்து கொண்டிருக்கின்றது. அதிமுக கொடியுடன் தமிழகத்திற்கும் நுழையக்கூடாது என்று அமைச்சர்கள் பலமுறை டிஜிபியை நேரில் சந்தித்து மனு அளித்த நிலையிலும், அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் அதிமுக தொண்டர்களும் கைகளில் கொடியை எடுத்து கொண்டு சசிகலாவை வரவேற்று வருகின்றனர்.

இந்த நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளரிடம் பேசும்போது, இரட்டை இலையை கைப்பற்றும் பணி தொடரும். காவல்துறை நடுநிலை தவறுவது நீதிமன்ற அவமதிப்பாகும். அதற்குரிய பலனை அவர்கள் அனுபவிப்பார்கள். தாங்கள் அமைச்சர்கள் என்பதை மறந்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தது வேடிக்கையாக உள்ளது என டிடிவிதினகரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *