தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வேண்டும் என பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்லி மேலிடத்தின் கவனம் சசிகலா பக்கம் திரும்பி உள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் என அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் செயல்பட வேண்டும். அப்போதுதான் திமுகவை வீழ்த்த முடியும் என சசிகலா கூறிவரும் நிலையில் அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைக்கும் எண்ணம் இல்லை என்று கூறி வருகிறார்கள். அதாவது சொத்து குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சசிகலா சிறையில் இருந்ததால் அவரை கட்சியில் சேர்த்தால் தேவையில்லாத பிரச்சினைகள் வரக்கூடும் என்பதால், அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்கும் எண்ணம் இல்லை என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் சசிகலாவை பாஜகவில் இணைப்பதற்கு தற்போது மேலிடம் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது சசிகலாவை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டால் முக்குலத்தோர் வாக்குகளை எளிதாக பெற்றுக் கொள்ளலாம் என பாஜக திட்டமிட்டுள்ளதாம். அதன் பிறகு சசிகலா தன்னுடைய சொத்துக்களை பாதுகாப்பதற்காக தான் பதவி வேண்டும் என்று நினைப்பதாக சிலர் கூறி வருவதால் அதிமுகவில் இணைக்கும் வாய்ப்பு இல்லை என்பது இறுதியாக தெரிந்துவிட்டால் சசிகலா பாஜகவில் இணைவதற்கு ஓகே சொல்லிவிடுவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் சசிகலாவின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று பாஜக உறுதி கொடுத்தால் கண்டிப்பாக சசிகலா இணைந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.