எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் தொண்டர்களுக்கு தலைமை மீது இருந்த விசுவாசம் தற்போது இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மண்டல அதிமுக மாவட்ட பொதுச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய இபிஎஸ், அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் பணி புரியவில்லை என்று நிர்வாகிகளை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.