அதிமுகவினரை அவதூறாக பேசிய டிடிவி…. வழக்கு பதிவு செய்த போலீசார்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் பிரச்சாரத்தின்போது அவதூறாக பேசியதாக அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது விழுப்புரத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மார்ச் 23 முதல் முதல்வர், துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் சி.வி சண்முகம் பற்றி அவதூறாக பேசியதாக அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.