அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்த நிலையில் ட்ரம்ப் வெற்றி பெற்றதால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வரும் காலங்களில் வட்டி விகிதங்களை குறைக்க டிரம்ப் ஆதரவாக இருப்பார் என தெரிகிறது.
இந்த நிலையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிய வாய்ப்பு இருக்கிறது. எனவே தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயரும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.