அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் 270 எலக்ட்ரோல் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் 214 எலக்ட்ரோல் வாக்குகளை மட்டுமே பெற்றார். இந்த நிலையில் வாக்கு எண்ணும் போது பின்தங்கிய நிலையில் இருந்ததால் கமலா ஹாரிஸ் ஒரு முடிவை எடுத்தார்.

கமலா ஹாரிஸின் பிரச்சார இணைத்தலைவர் செட்ரிக் ரிச்மண்ட் கூறியதாவது, இன்னும் என்ன வேண்டிய வாக்குகள் எங்களிடம் உள்ளன. இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படாத மாநிலங்கள் உள்ளன. இன்று இரவு துணை ஜனாதிபதியிடமிருந்து நீங்கள் உரையைக் கேட்க மாட்டீர்கள். ஆனால் நாளை அவரிடமிருந்து உரையை கேட்பீர்கள். அவர் நாளை இங்கு வருவார். தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல தேசத்திற்கும் உரையாற்றுவார் என அவர் கூறியுள்ளார்.