அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று ரிசல்ட் வெளியானது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிட்ட நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டுயிட்டார். இந்த தேர்தலில் 270 எலக்ட்ரோல் ‌ வாக்குகளைப் பெற்று ட்ரம்ப் வெற்றி பெற்ற நிலையில் கமலா ஹாரிஸ் 214 எலக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்புக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற என்னுடைய நண்பர் ட்ரம்புக்கு வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவில் செனட்‌ சபையையும் குடியரசு கட்சி கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.