“அதிதி சங்கரை விமர்சிக்காதீங்க”….. வருத்தம் தெரிவித்த பிரபல பாடகி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரன், சூரி, கருணாஸ் ஆகியோர் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் யுவன் சங்கர் ராஜா மற்றும் அத்தி இணைந்து பாடியுள்ள :மதுரை வீரன்’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த பாடல் மூலம் அதிதி சங்கர் பாடகியாகவும் அறிமுகமாகி உள்ளார்.

இந்நிலையில் இந்த பாடலை முதலில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செந்தில் பாடியுள்ளார். அதன் பிறகு மதுரை வீரன் பாடல் அதிதி சங்கர் குரலில் வெளியாகி உள்ளது. இதனால் பலரும் அதிதி சங்கரை விமர்சித்து வருகின்றனர். இது குறித்து பேசிய பாடகி ராஜலட்சுமி, சினிமாவில் இவ்வாறு நடப்பது சகஜம் தான். ஒரு பாடல் யார் பாடினால் நன்றாக இருக்கும் என்பதை இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும் அப்படி மதுரை வீரன் பாடலுக்கு அதிதியின் குரல் பொருத்தமாக இருந்துள்ளதால் பாட வைத்துள்ளனர். அவர் அருமையாக பாடி உள்ளார். சரியான ஆளுக்கு தான் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். இதற்காக அதிதியை விமர்சிப்பது வருத்தமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படம் சூர்யா தயாரிப்பில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *