திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுவர்தன். இவர் சம்பவ நாளில் கல்லூரியிலிருந்து தன்னுடைய பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் ஓட்டி சென்ற  பைக் தீப்பிடித்து எரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணுவர்தன் உடனடியாக சாலையில் பைக்கை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். அதிக வெயில் காரணமாக பைக் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். மேலும் அதிக வெயில் காரணமாக திடீரென பைக் சாலையில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.