திருச்சி மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு அதிக வாக்குகள் பெற்றுத் தரும் அதிமுக நகர செயலாளருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ப.கருப்பையாவை ஆதரித்து பேசிய அவர், ‘தேர்தலில் திருச்சி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத்தரும் வட்டச் செயலாளருக்கு 5 சவரன் தங்கச் சங்கிலி பரிசளிக்கப்படும்’ என்றார்