அதிக சத்துக்கள் நிறைந்த வாழைக்காயில்… ஒரு புது வகையான ரெசிபிய செய்து… இத ஸ்னாக்ஸாக கூட சாப்பிடலாம்..!!

வாழைக்காய் மிளகு வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

வாழைக்காய்                   – 1
மஞ்சள் தூள்                     – 1 சிட்டிகை
மிளகாய் தூள்                  – 1/2 டீஸ்பூன்
உப்பு                                     – தேவையான அளவு
எண்ணெய்                        – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள்       – 1 சிட்டிகை
கடுகு                                   – 1 டீஸ்பூன்

அரைக்க:

தேங்காய்                         – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி                                – 1/2 துண்டு
பூண்டு                              – 5
மிளகு                               – 3 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் வாழைக்காயின் தோலை நீக்கி, தேவையான வடிவத்தில் வெட்டி எடுத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் கடாயை வைத்து அதில் வெட்டிய வாழைக்காயைபோட்டு தண்ணீர் ஊற்றி  பாதியளவு வேகும் அளவுக்கு எடுத்து கொள்ளவும்.

பிறகு வேக வைத்த வாழைக்காயைப்  பாத்திரத்தில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு விரவி சில நிமிடம் அப்படியே ஊற வைத்துக் கொள்ளவும்.

பிறகு மிக்சிஜாரில் நறுக்கிய தேங்காய், இஞ்சி, பூண்டு, மிளகை போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்போல் நன்கு மையாக அரைத்து கொள்ளவும்.

மேலும் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்ததும், ஊற வைத்த வாழைக்காயை சேர்த்து சில நிமிடம் கிளறியதும், அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கி  விடவும்

பின்பு அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வாழைக்காயை நன்கு வேக வைத்து,சிறிது கிளறி இறக்கி பரிமாறினால், ருசியான வாழைக்காய் மிளகு வறுவல் தயார்.