டெல்லியில் உள்ள ராணி கார்டனில் குடிசை பகுதி உள்ளது. இங்கு இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு  தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 12 தீயணைப்பு வாகனங்களுடன் அவர்கள் சென்ற நிலையில் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு போராடி  தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்த்தனர்.

இந்த பயங்கர தீ விபத்தில் சுமார் 400-க்கும் ஏற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து  சேதமானது. இந்த தீ விபத்து இன்று அதிகாலை 2.35 மணிக்கு ஏற்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ உயிர் சேதமா ஏற்படவில்லை. சில ஆடுகள் மட்டும் தீயில் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.