செங்கல்பட்டு அருகே கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய மணிக்காரர் பகுதியை சேர்ந்த சாதமின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் கேஸ் கசிந்ததில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மற்றொரு குழந்தையும் தாயும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.