“அதிகரிக்கும் வன்முறை” வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு… போலீசார் கூறுவது என்ன…?

அமெரிக்காவின் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆரஞ்சு நகரில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 202W லிங்கன் அவென்யூவில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றது என்றும்  அதிகாரிகள் சென்ற பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறினார். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தாக்குதலில் ஈடுபட்ட நபர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் கூறினார். இந்த துப்பாக்கிச்சூடு எதற்காக நடந்தது என்ற விவரம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.