நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கடந்த 7-ம் தேதி நடைபெற்ற போது எம்பி ராகுல் காந்தி அதானி குழுமம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனக் கூறினார். அதோடு அதானியுடன் பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் புகைப்படங்களையும் ராகுல் காந்தி மக்களவையில் காண்பித்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பாஜக எம்பி நிஷிகாந்த் துபே அவதூறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்த ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இதன் காரணமாக ராகுல் காந்திக்கு மக்களவை செயலகம் தற்போது உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த நோட்டீசுக்கு வருகிற 15-ஆம் தேதிக்குள் ராகுல் காந்தி உரிய முறையில் பதில் அளிக்க வேண்டும் எனவும் மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.