அதானிக்கு புதிய விமானநிலையம்! நவி மும்பையில் வேற லெவல் OUTLOOK!

நவி மும்பையில்  புதிய சர்வதேச விமான நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து சேவையை கருத்தில் கொண்டு நவி  மும்பையில் சர்வதேச விமான நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய விமான நிலையம் நவி  மும்பையில் மும்பை பெருநகர பகுதி மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய விமான நிலைய ஆப்ரேட்டர் நிறுவனங்களில் ஒன்றான அதானி விமான நிலையத்தால் இந்த விமான நிலையம் கட்டப்பட்டு நிர்வாகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ககட்டடங்களாக  கட்டப்பட உள்ள இந்த விமான நிலையம் உலகின் மிகவும் ஆற்றல் திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிலையான வகையில் மற்றும் திறன் திட்டம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும் எனவும் விமான நிலையம் முழுவதும் சார்ஜிங் லைன் நிறுவப்படும் எனவும் இது பசுமை மின்சாரத்தையும் பரவலாக பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பெரும் பகுதி சூரிய சக்தியை தளத்தில் உற்பத்தி செய்யப்படும் எனவும் திட்டத்தை நிர்வகிக்கும் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதிய விமான நிலையம் மகாராஷ்டிராவிற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் முக்கியமானதாக இருக்கும் என்று மும்பை விமான நிலையத்தின் நெரிசலை குறைக்கும் எனவும் அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.