தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6ல் ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா இருவரும் நெருக்கமாக பேசிக்கொள்வதை பார்த்து அதனை ரொமான்ஸ் என நெட்டிசன்கள் குறிப்பிட்டனர். இந்த நிலையில் சென்ற வாரம் எலிமினேஷன் ஆகியுள்ள ரச்சிதா இப்போது ஒரு பேட்டி அளித்திருக்கிறார்.
அவற்றில் ராபர்ட் மாஸ்டர் உடன் தான் ரொமான்ஸ் செய்ததாக பேசுபவர்களுக்கு ரச்சிதா பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது, “ராபர்ட் மாஸ்டர் ரொம்ப பெரியவர். அவர் அழுகிறாரே என்று தான் அவரிடம் பேசினேன். அதை எப்படி காட்டினார்கள் என்பது முக்கியம். நான் பார்ப்பதை ஸ்லோமோஷனில் காட்டினால் அது ரொமான்டிக் ஆக பார்ப்பது போன்று தான் தெரியும். அதற்கெல்லாம் வாய்ப்பில்லை ராஜா” என ரச்சிதா கூறியிருக்கிறார்.