அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’… ரசிகர்களை கவரும் ‘தாலாட்டும் மௌனம்’ பாடல்…!!!

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அதர்வா. தற்போது இவர் ஒத்தைக்கு ஒத்த, தள்ளிப்போகாதே, குருதி ஆட்டம், அட்ரஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் குருதி ஆட்டம் படத்தை 8 தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீஸர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் குருதி ஆட்டம் படத்தில் இடம்பெற்றுள்ள தாலாட்டும் மௌனம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த அழகான பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *