அண்ணியுடன் தகாத உறவு…. இளைஞரை கழுத்தை நெரித்து கொலை செய்த நண்பன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகலூர் சாலை பகுதியில் உள்ள உளியாலம் என்ற கிராமத்தில் உள்ள தனியார் லேஅவுட்டில் கட்டுமான தொழிலாளர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள். அங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த சிவிஜி குமார் (22), பங்கஜு பசுவான் (25)ஆகியோர் வேலை செய்து வந்த நிலையில் இன்று காலை சிவிஜி குமார் ஒப்பந்தக்காரர் ஜெயக்குமார் என்பவருடன் போனில் அழைத்து பங்கஜு பசுவானை காணவில்லை என தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஜெயக்குமார் காணாமல் போன பங்காஜுவை தேடும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது தங்கி இருக்கும் அறையின் அருகே உள்ள முட்புதரில் அவரின் சடலம் கிடந்ததைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு அவருடன் தங்கி இருந்த சிவிஜி குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிறது.

அதாவது பீகாரில் இருக்கும் சிவிஜி குமாரின் அண்ணியுடன் பங்கஜு பசுவானுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனை அறிந்து சிவிஜி குமார் அவரைக் கண்டித்த நிலையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.இதனிடையே நேற்று அவர் பங்கஜுவை கழுத்தை நிறுத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.