அண்ணா பல்கலைக்கழக Special Exam எழுதுபவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் 100-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலையின் கீழ் படிக்கும் மாணவர்கள் அரியர் வைத்து இருந்தால் மீண்டுமாக தேர்வு எழுதுவதற்கு அவ்வப்போது சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படுவது வழக்கம் ஆகும். மேலும் அதிக முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை எனில் அவர்களுக்கு Special Exam எழுத அனுமதி வழங்கி வருகிறது.

அந்த அடிப்படையில் நடப்பு கல்வி ஆண்டிலும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தேர்வு பற்றிய கால அட்டவணையானது அண்ணாபல்கலைகழகம் வாயிலாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான அனுமதி சீட்டு எப்போது வெளியாகும் என தேர்வர்கள் காத்திருந்த நிலையில், தற்போது அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் நுழைவுசீட்டு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் Nov. / Dec. Special Examinations 2022 தேர்வுக்கான அனுமதி சீட்டை பெற விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://coe1.annauniv.edu/home/